அப்பா பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை…
–கார்த்திக் குருமூர்த்தி
அதன் நினைவாகத்தான் இந்த பதிவு.
ஒரு தந்தையாவது இலகுவானது.
ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினம்.
ஒரு மனிதன் பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும் திடமும் அப்பா என்கிற
அடி வேரிலிருந்து கிடைத்ததுதான்.
ஒரு குழந்தையின் நடத்தை பழக்கவழக்கம் பண்பு எல்லாவற்றிற்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.
கடவுள் மனிதன் உயிர்களுக்கு அளித்த மிகப் பெரிய வெகுமதி தந்தை.
ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்பொழுதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகின்ற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.
அம்மா என்றால் அன்பு என்கிறோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அன்பும் மிகுந்த ஆழமானது தான் அவர்களின்பாசமும் ஈரமானது தான். அப்பாவ தான் சொல்றேன்.
தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால் பிள்ளைக் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.
வாழ்வில் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசான் அப்பாக்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம்
அவரவர் அப்பாக்களே!!…
ஒரு குழந்தை அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு எடுத்து வைக்கின்ற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.
இரு கைகள் தட்டி எழுப்பும் ஓசை போல அம்மா அப்பா என்கின்ற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பு பிணைப்பு இல்லாமல்
ஒரு நல்ல மனிதனை எந்த சமூகமும் உருவாக்க முடியாது.
பிள்ளைகள் தூக்கத்தில் இருக்கும்போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டு க்கொண்டு போர்த்திவிட்டு வேலைக்குப் போகிறார்கள்.
பின்னர் பிள்ளைகள் தூங்கி விட்ட பிறகு வீடு வந்து சேர்கின்ற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்.
ஒரு நல்ல அப்பாவிடமிருந்து கிடைத்து விடுகின்ற பெரிய வெகுமதிகள்…
எவருக்கும் பயப்படாதே..
ஒன்றுக்கும் யோசிக்காதே..
எல்லாம் வெல்லலாம்..
மனசைத் தளர விடாதே..
உண்மையைச் சொன்னால் எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை..
இவையெல்லாம் அப்பாக்கள் தன்பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசி வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் நம்பிக்கை தரும் கட்டளைகள்.
அப்பாக்கள்.
சுமைதாங்கி..
நெம்புகோல்..
அச்சாணி…
சூரியன்..
திசை காட்டி…
ஆசிரியர்…
நம்பிக்கை..
அப்பாவின் தூய்மையான அன்பு.
போலியற்ற அக்கறை.
நேர்மையான வழிகாட்டல்.
நியாயமான சிந்தனை.
நேசிக்க தக்க உச்சரிப்பு.
மாறுதலில்லா நம்பிக்கை
காயங்களற்ற வார்த்தை.
கம்பீரமான அறிவுரை.
களங்கமில்லாத சிரிப்பு.
உண்மையான அழுகை
என அத்தனையும் உளம் மகிழ்ந்து செய்து வளர்த்தவர்.
தோழனுக்கு தோழனாய் தோள் கொடுப்பவர் அப்பா.
Leave a comment