–கார்த்திக் குருமூர்த்தி
நண்பர் ஒருவர் கூறினார் என்று “Good night” என்னும் ஒரு திரைப்படத்தை பார்த்தேன்… ஹீரோவுக்கு பிரச்சினையே குறட்டை தான்… அது அவருக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையை தருகிறது என்பது திரைப்படம் முழுவதும் மிகவும் நகைச்சுவையுடன் நகர்த்தி சென்று கொண்டிருக்கிறார் இயக்குனர்… ஹீரோயின் அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி… நடித்த அனைவருக்கும் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்… இயக்குனரின் முதல் படமாம் இது. யதார்த்தமான படம் கதாநாயகன் கதாநாயகி இருவரும் நம்மை கவர்ந்து விடுகிறார்கள். சாதாரண குறட்டை பிரச்னை பெரிதாகி டைவர்ஸ் வரை சென்று கடைசியிலே நல்ல முடிவு. பொறுமையாக பார்க்கலாம்.
Leave a comment