–கார்த்திக் குருமூர்த்தி
உலகம் மாறிடுச்சு, அதுல முக்கியமான ஒரு மாற்றம் வந்து உறவுகளோட முறை மாறிடுச்சு.இதை நாம புரிஞ்சுக்கிட்டோம்னா, வளரவும் முடியும்,அமைதியாவும் இருக்கவும் முடியும்.இதை நாம புரிஞ்சிக்கலன்னா வளர்ச்சியும் கஷ்டம்…அமைதியா இருக்க முடியாது.நிம்மதியா இருக்க முடியாது வாழ்க்கையில.
ஒரு முக்கியமான மாறுதல் என்ன ஆயிருக்குன்னா…இன்டர்நெட், சோஷீயல் மீடியா இதுலாம் வர்றதுக்கு முன்னாடி…எனக்கு இப்போ வந்து மகாத்மா காந்தியைப் பத்தி எதாவது தெரியணும்ன்னா,ஒன்னு பாட புத்தகத்துல இருந்து கத்துக்கலாம்.இல்லை ஆசிரியர்கள் கையில இருந்து கத்துக்கலாம்.இல்லைன்னா…தாத்தா, பாட்டி, அப்பா, பெரியப்பா, பெரியம்மா இவங்க கையில இருந்து கேட்டு கத்துக்க முடியும்.அதனால, வாழ்க்கையில நாம எந்த விஷயம் புரிஞ்சிக்கணும்னாலும் உறவு முறை மூலமாதான் நாம கத்துக்கணும்.There was always context for communication. எனவே, மனிதர்களோட எப்போதும் தொடர்புல இருக்கறதுக்கு சந்தர்ப்பம் இருந்தது.
எது நமக்கு தெரியணும்னாலும், எனக்கு ஒரு கேள்வி இருக்கு அதுக்கு எனக்கு விடை வேணும்ன்னா நான் போய் என் நண்பன் கையிலயோ, அப்பா கையிலயோ, அம்மா கையிலயோ, அண்ணன் கையிலயோ, இல்லாட்டா வந்து அலுவலகத்துல என்னோட மேல் அதிகாரி கையில போய் தான் கேக்கணும். எனவே, எந்த வகையான கற்றலா இருந்தாலும் அது தகவல் தொடர்புக்கான சந்தர்ப்பமா அமைஞ்சது.
இப்போ எப்படி ஆயிடுச்சுன்னா, எனக்கு எது தெரியணும்ன்னாலும் நான் இன்டர்நெட் கையில போய் கேட்டிருறேன். உடனே என்னோட கேள்வியை, சந்தேகத்தை கூகுள்ல டைப் பண்ணிடறேன்.அதனால, நம்மளோட முதன்மை தகவல் தொடர்பு, உறவாடல் டெக்னாலஜியோட ஆயிடுச்சு. ஆக, நான் எது தெரிஞ்சுக்கணும்ன்னாலும் உறவு முறை மூலமா இன்னொரு மனிதர் கையில இருந்து தெரிஞ்சுக்கறது இல்லை.எனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் இப்போ இந்த இதுவே, என் கையில கூகுள்ல டைப் பண்ணிடறேன்.
நமக்கு டெக்னாலஜியோட எப்படி உரையாடணும்ன்னு தெரியுதே தவிர,உறவாடணும்ன்னு தெரியுதே தவிர, மனிதர்களோட, உறவுகளோட உறவாடறது குறைஞ்சு போச்சு.குறைஞ்சு போச்சு இல்லை… நின்னு போச்சு.
ஒரு ஓட்டலுக்கு போனோம்னா காஃபி, இட்லி…இல்ல வந்துட்டு வெளியில வந்து ‘டிரைவர் வண்டியை எடு…’ இந்த மாதிரி ஒரு உரையாடல் தான் குடும்பத்துக்குள்ளேயே நடக்கிறதே தவிர…டிஃபன் ரெடியா? நான் ஸ்கூல் போறேன்…ரிமோட் கொடு,தூங்குறேன்…
இதைத் தாண்டி வந்து உரையாடல்கள் இல்லை.உரையாடல்கள் இல்லைன்னா, உறவுகளை வளர்க்க முடியாது. உறவுகளுக்குள்ள உரையாடல் இல்லைன்னா…உறவுகள் வளராது.
இந்த தெளிவு நமக்கு நிச்சயம் வேணும்.இதை புரிஞ்சுக்கிட்டு,ஓரளவுக்கு…உறவுகள்ல நாம உரையாடல்களை வளத்துக்கணும்.அப்பா கையில வந்துட்டு உன் வாழ்க்கையில நடந்த எதாவது ஒரு கதையை சொல்லுப்பா? இல்லை, நேத்து எனக்கும் என் நண்பனுக்கும் நடுவுல இந்த மாதிரி வந்து ஒரு உரையாடல் இருந்தது.அதை வந்துட்டு நான் என் தங்கச்சி கையில வந்து பகிர்ந்துக்கணும்.
இது தான் என்னோட கனவு,இதை எப்படி நான் செயல்படுத்துறதுன்னு தெரியல,என்னோட மேல் அதிகாரியோட நான் பேசணும்.பசங்க ஸ்கூல்ல இருந்து வந்த உடனே இன்னைக்கு ஸ்கூல்ல என்னாச்சுன்னு கேக்கணும். வாழ்க்கையில நமக்கு கிடைச்ச வெற்றிகள்,தோல்விகள், முயற்சிகள் நமக்கு கிடைச்ச உறவுகள், நம்மள விட்டு போன உறவுகள் இதல்லாம் நாம பேச ஆரம்பிக்கணும் அன்னியோன்யம்ன்றது என்னது? உன் வாழ்க்கையை நீ என்னோட பகிர்ந்துக்கணும்.என் வாழ்க்கையை நான் உன்னோட பகிர்ந்துக்கணும்.இப்போ நமக்கு எப்படின்னா,சினிமால நடிக்கிறவனும், IPLல கிரிக்கெட் ஆடுறவனோட வாழ்க்கையில என்னல்லாம் நடக்குதுன்னு, நமக்கு இன்டர்நெட் மூலமா தெரியுமே தவிர,நம்ம மாமா, நம்ம அண்ணி,நம்ம மாமியார், நம்ம அப்பா நம்ம குழந்தைங்களோட வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு நமக்கு உண்மையில தெரியாது.
விராட் கோலி அனுஷ்கா சர்மாவோட வாழ்க்கையில இப்போ என்ன நடக்குது…ஹர்திக் பாண்டியாவுக்கும், ரோஹித் சர்மாவுக்கும் நடுவுல இப்போ என்ன போய்ட்டு இருக்கு…
இதெல்லாம் நமக்கு தெரியுமே தவிர, உங்க புள்ளையோட வாழ்க்கையில என்ன நடக்குது, உங்க பொண்ணு ஏன் மூனு நாளா சிரிக்கல,பேசிக்கறதுக்கு கூட வாய்ப்பு இல்லாம போய்டும்.அதனால, டெக்னாலஜியை விட்டு விலகிப் போங்கன்னு சொல்ல வரலை. உறவுகளோட இணைஞ்சு போங்கன்னுதான் நான் சொல்றேன்.இதை நீங்களா புரிஞ்சு, கடைப்பிடிச்சாதான் இதுக்கு தீர்வு.இப்பயே உடனே,நிறுத்திட்டு யாரோ உறவினரோட ஃபோன்லையோ, நேரயோ கண்ணைப் பாத்தோ…கொஞ்ச நேரம் உறவாடுங்க.
தினமும் குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரமாவது,மனிதர்களோட உரையாடுங்க…மனிதர்கள் மனிதர்களோட,டெக்னாலஜியோட இல்ல…உறவாட ஆரம்பிக்கணும்.அப்போ தான் உறவுகள் வளரும்.உறவுகள் வளர்ந்தா தான் வாழ்க்கையில அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும்.டெக்னாலஜியால உங்களுக்கு சந்தோஷத்தை தர முடியாது.உறவுகளால மட்டும்தான் உங்களுக்கு சந்தோஷத்தை தர முடியும்.
நன்றி.
Leave a comment