-கார்த்திக் குருமூர்த்தி
இதை நாம் இப்படித் தான் காலம் காலமாக செய்து வருகிறோம், எனவே இதை இப்படித் தான் செய்ய வேண்டும்” என்று யோசிப்பதை நிறுத்துங்கள். இப்படிப்பட்ட தலைமுறை தலைமுறையாக வரும் எண்ணத்தால் கஷ்டப்படாதீர்கள். பனிக்கட்டியில் எதுவும் விளையாது. அதே போல் நம் மனது கடந்த காலத்தை நினைத்து இறுக்கிக் கொண்டால் புதிய யோசனைகள் எதுவும் நமக்கு தோன்றாது. நம்மை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள பல வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் சாதனையாளர்கள் எப்போதும், ”என்னால் இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?” என கேட்பதில்லை. அவர்களால் முடியும் என அவர்களுக்கு தெரியும். அவர்கள் கேட்பது, ”நான் இதை எவ்வாறு மேம்படுத்த முடியும்?” என்பதே. தினசரி வாழ்க்கையில் வீட்டிலிருந்து அலுவலகம் தொடங்கி சமுதாய வளர்ச்சி வரை என எல்லா இடத்திலும் முன்னேற்றத்துக்கான சூத்திரம் – ‘நீ என்ன செய்கிறாயோ அதை இன்னும் சிறப்பாக செய்’ (அதாவது உன்னுடைய வேலையின் தரத்தை உயர்த்து) மேலும் ‘அதை இன்னும் அதிகமாக செய்’ (உன்னுடைய நேரத்தையும் அளவையும் உயர்த்து). தரமும் எண்ணிக்கையும் உயரும் பொழுது வளர்ச்சி நிச்சயம்
Leave a comment