–கார்த்திக் குருமூர்த்தி
எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதை விட
மனசாட்சிக்கு நல்லவனாக இருப்பதே மேலானது .
எல்லோரும் நம்மை பாராட்டனும்
எல்லோரும் நம்மை புகழ்ந்து பேசணும்
நம்மை தூக்கி வைத்து கொண்டாடனும்
என்று இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது .
இது எதுவும் நிலைக்காது .
பின் எது நிலைத்து நிற்கும் ? —
நம் மனசு நம்மள பாராட்டனும்
நம் மனசாட்சி நீ நியாயமா நடந்துக்கற என்று சொல்லனும் .
மற்ற சாட்சிகளை விட மனசாட்சியே மிகவும் முக்கியமானது
என்று மனசுக்கு துரோகம் செய்யாமல் வாழக்கூடியவர்கள் மாமனிதர்கள்.
Leave a comment